கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!
Author: Hariharasudhan15 January 2025, 6:11 pm
தெலுங்கானாவில் கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் மற்றும் ஆண் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் ஞானக்கிராம்கூடா பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பின்பக்கம் கல்குவாரி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காற்றாடி விடச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது.
இதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, முகம் சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலமும், அங்கிருந்து சற்று தொலைவில் நிர்வாணமான நிலையில் முகம் சிதைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமும் கிடந்துள்ளது.
எனவே, அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில், நார்சிங் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஹைதராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சடலங்கள் அருகே மதுபாட்டில்கள் கிடந்தது தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கொலையான இளைஞர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கீத்சாகேத் (35) என்பதும், ஞானகிராம் கூடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணி செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவருடன் சடலமாக கிடந்த இளம்பெண், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து (25) என்பதும், அங்குள்ள எல்பி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது. மேலும், இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: மீண்டும் பெரியார் குறித்து கொச்சை பேச்சு… சர்ச்சையை கிளப்பிய ஹெச் ராஜா!!
தொடர்ந்து, அவர்களது செல்போன்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன்படி, இருவரும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தார்களா, என்று தெரியவில்லை. அப்போது, இருவரும் தனிமையில் இருந்தபோது, குடிபோதையில் வந்த கும்பல், இளைஞரைத் தாக்கி அந்த பெண்ணை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.
அப்போது, இதனை அங்கீத்சாகேத் தடுக்க முயன்றதால் அவரை கடுமையாகத் தாக்கி, முகத்தைச் சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கலாம் என்றும், இதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணையும் முகம் சிதைத்து உயிருடன் எரித்துக் கொன்றிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.