முகம் எரிந்த நிலையில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள்.. காஞ்சி அருகே பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2025, 6:48 pm
காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விழுதவாடி கிராமம் அருகே உள்ள ஏரிக்கரை தாங்கலில், மூன்று நபர்கள் முகம் எரிந்து இறந்த நிலையில் சடலமாக மிதப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், நீரில் மிதந்து கொண்டிருந்த அழுகிய சடலத்தை மீட்டனர். இதனிடையே, இறந்த நபர்கள் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா (17), சத்ரியன் (17) மற்றும் பரத் (17) ஆகிய மூன்று பேர் என்பது தெரிய வந்தது.
மேலும், மூவரும் வாலாஜாபாத் அருகே உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இறந்த நபர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரம், உத்திரமேரூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தைச் சஞ்சய் என்பவர், பழையசீவரம் கிராமத்தை சேர்ந்த பரத் என்பவருடன் பிரச்னை செய்து வாங்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தச் சம்பத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.