இவ்வளோ முடி கொட்டுதேன்னு இனி கவலை வேண்டாம்… சொல்யூஷன் ரெடியா இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
15 January 2025, 7:02 pm

பல நபர்கள் அடிக்கடி தலைமுடி பிரச்சனைகள் குறித்து வருத்தப்படுவதை நம்மால் கேட்க முடிகிறது. ஆனால் இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் அதனால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். தலைமுடி பிரச்சனையை கையாளுவது என்பது அதன் அடிப்படை காரணத்தை புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அதற்கான சிறந்த தீர்வுகளை நம்மால் பெற முடியும். மன அழுத்தம், மரபணுக்கள், ஹார்மோன் சமநிலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஒரு சில மருந்துகள், இறுக்கமாக தலைமுடியை பின்னுவது, தலைமுடி பராமரிப்பு ப்ராடக்டுகள், மோசமான உணவுகள், ஒரு சில உடல்நல பிரச்சனைகள் மற்றும் கீமோதெரபி அல்லது ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகள் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

அடிக்கடி நீங்கள் கர்லிங் அயர்ன், ஹேர் டிரையர்கள் அல்லது ஸ்ட்ரெய்ட்னர்களை பயன்படுத்தும் ஒருவர் என்றால் உங்களுடைய தலைமுடி சேதமடைவதை குறைப்பதற்கு நீங்கள் ஹீட் ப்ரொடெக்டர் ஸ்பிரேக்களை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்பிரேக்களை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்த்தால் அது உங்களுடைய தலைமுடிக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தி, தலைமுடி உதிர்வை அதிகமாகும். இயற்கையான முறையில் அதிகப்படியான தலைமுடி உதிர்வை எப்படி சமாளிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் போன்ற ஹேர்கேர் ப்ராடக்டுகள் தலைமுடி உதிர்வை தடுப்பதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. உங்களுடைய தலைமுடியின் வகை மற்றும் அமைப்பை பொறுத்து சரியான ப்ராடக்டுகளை தேர்வு செய்வது அவசியம். எப்பொழுதும் ஆல்கஹால் மற்றும் பாராபென்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இல்லாத ப்ராடக்டுகளை வாங்குங்கள். 

இதையும் படிக்கலாமே: இந்த ஹேபிட் இருக்கவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் இல்ல!!!

அடிக்கடி அல்லது வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்தி தலைமுடியை மற்றும் மயிர்க்கால்களை மசாஜ் செய்வது அளவுக்கு அதிகமான தலைமுடி உதிர்வை குறைக்கும். தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ஆர்கான் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவை இந்த மசாஜ் செய்வதற்கு சிறந்த எண்ணெய்களாக கருதப்படுகின்றன. உங்களுடைய மயிர்க்கால்களை 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்தாலே போதுமானது. இது தலைமுடிக்கு தேவையான போஷாக்கை வழங்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக தலைமுடி வளர்ச்சியை  ஊக்குவிக்கும்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மயிர் கால்களை பராமரிப்பதற்கு மிகவும் அவசியம். நாள் முழுவதும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்கள் மயிர்கால்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். அதேபோல ஒவ்வொரு நாள் இரவும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். உங்களுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள்.

இறுதியாக எப்பொழுதும் உங்களுடைய தலைமுடிக்கு இயற்கையான தீர்வுகளை முடிந்த அளவு பின்பற்றுவது நல்லது. அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கொண்டிருப்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!
  • Leave a Reply