ரூ.100 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர்!
Author: Hariharasudhan15 January 2025, 7:53 pm
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடியிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருப்பவர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமலாக்கத்துறை சென்னை மண்டலம், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அமலாக்கத்துறை சென்னை மண்டலம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு 2002-இன் கீழ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் இரு அசையா சொத்துக்களை ஜனவரி 9ஆம் தேதி அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: முகம் எரிந்த நிலையில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள்.. காஞ்சி அருகே பரபரப்பு!
இந்த சொத்தின் மதிப்பு தோராயமாக 100.92 கோடி ரூபாய் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில், தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.