குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!

Author: Selvan
15 January 2025, 8:53 pm

முதல் பரிசை தட்டி சென்ற அஜித் மகன் ஆத்விக்

சமீபத்தில் துபாயில் நடந்த 24H கார் ரேஸில் அஜித் தனது அணியுடன் கலந்து கொண்டார்.அப்போது பல வித சவால்களை எதிர்கொண்ட அஜித் விடாமுயற்சியோடு கார் ரேஸில் கலந்து கொண்டார்.

Ajith and Son Advik Motorsports Journey

போட்டியின் முடிவில் அஜித் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.இந்த மெகா வெற்றியை உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.அது மட்டுமல்லாமல் அஜித் ரேஸில் ஈடுபட்ட போது தன்னுடைய ரசிகர்களுக்கு பல வித அறிவுரைகளை கூறி வந்தார்.

இதையும் படியுங்க: வரலக்ஷ்மி கணவரை குடும்பத்தை விட்டு ஒதுக்கினாரா…பொங்கல் அன்று சரத்குமார் செய்த திடீர் செயல்..!

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் கார் ரேஷை காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.மேலும் அஜித் தனது அணியுடன் பரிசு வாங்கும் போது,தனது மகனை மேடையில் அழைத்து மகனுடன் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்த GO KART கார் ரேஸில் அஜித் மகனான ஆத்விக் முதல் பரிசை வாங்கி அசத்தினார்.

ஏற்கனவே அஜித் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பல போட்டிகளில் கலந்து வரும் சூழலில்,தற்போது கார் ரேஸிலும் கலக்கி வருகிறார்..இதனால் கூடிய விரைவில் பல கார் ரேஸில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

  • தெலுங்கில் அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபு…படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து..!
  • Leave a Reply