அதிக புரோட்டின் சாப்பிடறதால சிறுநீரக கற்கள் உருவாகுமா…???

Author: Hemalatha Ramkumar
15 January 2025, 8:16 pm

புரோட்டீன் என்பது நம்முடைய உணவில் மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. தசைகளை உருவாக்குவதற்கும் அவற்றை சரி செய்யும் செயல்முறையில் இது முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமான புரோட்டீன் என்பது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரதம் காரணமாக நம்முடைய உடலில் மெட்டபாலிசம் செயல்முறையின் போது ஒரு அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் நிறைந்த சிறுநீர் யூரிக் அமில சிறுநீரக கற்கள் உருவாக்குவதில் முக்கிய காரணி ஆக அமைகிறது.

அளவுக்கு அதிகமான புரோட்டீன் விளைவாக என்ன ஆகும்?

இந்த சூழ்நிலையில் ஒருவர் எந்த மூலத்தில் இருந்து புரோட்டீன் எடுத்துக் கொள்கிறார் என்பதை பொறுத்து அதன் விளைவு மாறுபடும். புரோட்டின் என்பது பருப்பு, பீன்ஸ், கடல் சார்ந்த உணவுகள் மற்றும் பிற தாவரங்கள் மூலமாகவும் கிடைக்கிறது. அளவுக்கு அதிகமான சாச்சுரேட்டட் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் உடன் எடுத்துக்கொள்ளப்படும் புரோட்டீன் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீன்.

விலங்கு புரோட்டீன் என்பது நம்முடைய சிறுநீரில் அமில அளவுகளை அதிகப்படுத்தும். இது கால்சியம் ஆக்சலேட் அல்லது யூரிக் அமிலம் கற்கள் உருவாவதற்கு ஏதுவான ஒரு சூழலை அமைக்கிறது. இது தவிர இறைச்சிகளை நம்முடைய உடல் உடைக்கும் பொழுது அந்த செயல்முறையின் போது கற்கள் உருவாக்கத்தை அதிகப்படுத்தும் யூரிக் அமிலம் வெளியிடப்படுகிறது. அதிக புரோட்டின் நிறைந்த உணவுகள் ரத்தத்தில் புரோட்டீன் சேகரிப்புக்கு வழிவகுக்கலாம்.

சிறுநீரக கற்கள் உருவாக்கத்தை தவிர்ப்பது எப்படி?

*நீங்கள் அதிகமான அளவு தண்ணீர் குடிக்கும் பொழுது அதிகப்படியான உப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். தண்ணீரின் உதவியுடன் உடலானது உப்புகள் கிரிஸ்டல் ஆவதை தடுக்கும்.

இதையும் படிக்கலாமே:  இவ்வளோ முடி கொட்டுதேன்னு இனி கவலை வேண்டாம்… சொல்யூஷன் ரெடியா இருக்கு!!!

*சராசரி உடல் எடையை கொண்டிருப்பவர்களுடன் ஒப்பிடும்பொழுது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு உள்ளது. எனவே சரிவிகித உணவு மற்றும் உடல் எடை கட்டுப்பாடு மூலமாக நீங்கள் சிறுநீரக கற்கள் உருவாக்கத்தை தவிர்க்கலாம்.

*ஒவ்வொரு நபரின் புரோட்டீன் தேவையும் மாறுபடும். இது தனிநபர்களின் வயது செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை பொருத்து அமைகிறது. எனவே உங்களுடைய உடல் தேவைக்கு ஏற்ப சரியான அளவு புரோட்டீனை சாப்பிடுவது அவசியம்.

*அதிக அளவு சோடியம் சிறுநீரக கற்கள் உருவாக்கத்தை அதிகரிக்கும். ஏனெனில் இது உடலில் கால்சியத்தை அதிகரித்து அதன் மூலமாக சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், நூடுல்ஸ் போன்ற இன்ஸ்டன்ட் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!
  • Leave a Reply