பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்… பாய்ந்து வந்த கார் : நொடியில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2025, 10:40 am

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக சாலை ஓரம் அதிகாலை 5 மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பழைய கன்னிவாடி கரிசல் பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து மேற்படி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்க: அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?

இந்த விபத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கேசவன், மற்றும் மதுரை வடிவேலன் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடைக்கல ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுவன் கேசவனின் தந்தை அழகர் பலத்த காயங்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Palani Padayatra Devotees died in accident

மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் கார் மோதி பலியான சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Alanganallur Jallikattu highlights அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!
  • Leave a Reply