விஜய் சேதுபதியை அழ வைத்த படக்குழு…பிறந்த நாள் அதுவுமா இப்படியா..வைரலாகும் வீடியோ..!
Author: Selvan16 January 2025, 2:02 pm
பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரெயின் படக்குழு
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தன்னுடைய திறமையால் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி.
இவர் தற்போது பல படங்களில் நடித்து தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைக்கு தன்னுடைய 46 வது பிறந்த நாளை கொண்டாடும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மிஸ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ட்ரெயின் திரைப்படத்தின் படக்குழு அவருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் ஆக ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்க: பல கோடிக்கு நாமம் போட்ட லோக்கல் டிவி…அதிர்ச்சியில் கேம் சேஞ்சர் படக்குழு..!
அதில் கன்னக்குழிக்காரா என்ற பாடலில் விஜய்சேதுபதி ட்ரெயின் உள்ளே நடந்து வர மாதிரியும்,அடுத்து டப்பிங்கில் ஒரு காட்சிக்கு விஜய்சேதுபதி அலறி துடித்து கத்தும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிகாஷன்,நாசர்,நரேன்,கே எஸ் ரவிக்குமார்,கலையரசன் என பலர் நடிக்கின்றனர்.தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.