3 குழந்தைகளையும் விட்டுச் சென்ற மனைவி.. விடாது துரத்திய 5 பேர்.. கடைசியில் நேர்ந்த சோகம்!

Author: Hariharasudhan
16 January 2025, 2:27 pm

தெலுங்கானாவில், கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திவாகர் – பிந்து (25) தம்பதி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு பிழைப்புக்காக வந்துள்ளனர்.

இதன்படி, திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார். அதேநேரம், பிந்து வீட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கீத் சாகேத் (25) என்பவருடன் பிந்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியுள்ளது. இது ஒரு கட்டத்தில் திவாகருக்கு தெரிய வந்துள்ளது.

எனவே, சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றி உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி, பிந்து, அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனையடுத்து, இந்த ஜோடி, புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்துள்ளனர்.

Wife and her boyfriend killed by his friends gang in Telangana

இதனிடையே, மனைவி காணாமல் போனது குறித்து திவாகர், வனஸ்தலிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி, அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து, புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோயில் அருகே வருமாறு அழைத்துள்ளார்.

இந்த அழைப்பின் பேரில், அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, அங்கித் சாகேத் மது அருந்தி உள்ளார். இதனையடுத்து, மது போதையில் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர். அப்போது, அருகே இருந்து இதனைக் கண்ட பிந்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி.. சுட்டுப் பிடிக்கப்பட்ட பாம் சரவணன் யார்?

ஆனால், அவரையும் துரத்திப் பிடித்து, கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நபர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Leave a Reply