பொங்கல் விழாவில் இளைஞரை சரமாரியாக வெட்டிய முதியவர்… கூட்டத்துக்குள் நடந்த பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2025, 2:36 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார். அதே பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தீபா தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.

இதில் மூத்த மகளான மதுமிதாவை அருண்குமார் என்பவர் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாகவும் பாலு வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன் பெண் கேட்டு சென்றுள்ளனர். பாலு மற்றும் தீபா இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதையும் படியுங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அருண்குமார் பாலு மற்றும் தீபா குடும்பத்தின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் சமரசம் பேச்சு முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாட்டுப் பொங்கல் என்பதால் செம்மேடு கிராமத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அருண்குமார் தம்பி டெல்லி பாபு மற்றும் மதுமிதாவின் தந்தை பாலு இருவரும் ஒன்றாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது டெல்லி பாபுவிடம் அண்ணன் அருண்குமார் வந்து அவன் தான் எனக்கு பொண்ணு தரவில்லை நீ ஏன் அவனிடம் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறாய் என்று கேட்டதாகவும், இதனை தொடர்ந்து பாலுவிடம் அருண்குமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது பாலுவின் மனைவி தீபாவையும் மற்றும் சஞ்சனா வயது 19 பெண்ணையும் அருண்குமார் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலு கத்தியால் அருண்குமாரை வெட்டி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த அருண்குமாரை மற்றும் தீபா மகள் சஞ்சனா மூவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையின் போது மது போதையில் இருந்த அருண்குமார் அவதூறு வார்த்தைகளால் பேசி தகராறு ஈடுபட்டார்
மேலும் மேல் சிகிச்சைக்காக அருண்குமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் அருண்குமாரை வெட்டிய பாலுவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Knife Stabbed on youth

ஒரு தலை காதல் பெண் கேட்டு தராத விரக்தியில் பொங்கல் விழாவின்போது பெண்ணின் தந்தையிடம் தகராறு ஈடுபட்டதால் பெண்ணின் தந்தை கத்தியால் வெட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Anupama Parameswaran love statement காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!
  • Leave a Reply