சர்ச்சில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சாதி பெயர் சொல்லி திட்டியதால் தற்கொலை முயற்சி!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2025, 4:06 pm
கோவை ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (38). இவருக்கு கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் முருகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ராம்குமார் இருவரும் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!
இதில் சர்ச் நிர்வாகத்தினர் முருகேஸ்வரியை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணியிட மாறுதல் செய்து உள்ளனர். முருகேஸ்வரி இதற்கு விளக்கம் கேட்டு இருக்கிறார்.
அப்பொழுது அந்த நிர்வாகத்தினர் சாதிய ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் தூண்டுதலின் பெயரில் அவருக்கு வன்கொடுமை நடந்து உள்ளதாகவும், இவர் கேள்வி கேட்டவுடனே அவருடைய கணவர் ராம்குமாரையும் வேலையில் இருந்து நிறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3.11.2024 அன்று தேவாலய வழிபாட்டுக்கு வந்து இருந்த முக்கிய பொறுப்பில் உள்ள அமிர்தம் என்பவரிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும், ஆசை வார்த்தை கூறி அவர்களை மத மாற்றி விட்டதாக கூறிக் கொண்டு இருந்த வேளையில், அங்கு வந்த பாக்கிய செல்வன் என்பவர் ஜாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி அங்கு வந்து இருந்தோர் முன்னிலையில் அவமானப்படுத்தி தாக்கி உள்ளதாகவும், அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தேவாலயத்தின் பொருளாளர் காட்வின் என்பவரிடம் முறையிட்ட போது, அவர் பாக்கியசெல்வன் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோரிடம் பேசி புது வருடத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.
அவர்களின் வறுமை மற்றும் ஏழ்மையை பயன்படுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு, கவிராஜ் என்பவரின் சூழ்ச்சியாலும் தீமோதி ரவிந்தர் அவர்களின் நிர்பந்தத்தின் பேரில் கட்டாய மதமாற்றம் செய்து, அவர்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக, அதனை அவர்கள் தட்டி கேட்டதாலேயே அவர்களுக்கு இதுபோன்ற கொடுமை நடந்து உள்ளது என்றும் அதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாக, முருகேஸ்வரி காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அனைவரிடமும் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முருகேஸ்வரி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கு காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வழிவகை செய்து தர வேண்டும் என்று வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.