சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
Author: Selvan16 January 2025, 5:05 pm
கொள்ளையனுக்கு உதவிய வீட்டின் ஊழியர்
நேற்று நள்ளிரவில் பிரபல நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது,அவரை கத்தியால் பகிரங்கமாக தாக்கி தப்பி சென்றுள்ளனர்.
தற்போது சைஃப் அலி கான் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில் மிகப்பெரிய பணக்கார பிரபலங்கள் வசிக்கும் பாந்தரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.எப்போதும் அங்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி பாதுகாவலர் இருக்கும் பட்சத்தில் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையன் எப்படி உள்ளே நுழைந்தான் என்ற கேள்வி போலிஸாரிடம் எழுந்துள்ளது.
இதையும் படியுங்க: பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!
மேலும் அவரது வீட்டில் உள்ள கேமராவை ஆராயும் போது 2.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.அதற்கு முன்பாக இவரது வீட்டில் யாரும் நுழைவது போல் எந்த ஒரு காட்சிகளும் பதிவாகவில்லை.இதனால் வீட்டில் உள்ள ஊழியர்கள் உதவியுடன் முந்தய நாளை கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து பதுங்கி இருக்கலாம் என போலீசார் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரை விசாரித்து வருகிறார்கள்.
மேலும் கொள்ளையனுக்கும் அவருக்கும் பழக்கம் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் அரங்கேறிய போது அவருடைய மனைவி கரீனா கபூர் வீட்டில் இல்லை,அவர் தனது தங்கை மற்றும் தோழிகளுடன் பார்ட்டியில் இருந்துள்ளார்,அங்கே இருந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் கொள்ளையன் தெரிந்து திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறான் என்று தெரியவந்துள்ளது.மேலும் வீட்டில் வேலை செய்யும் ஒரு ஊழியரை கைது செய்து அவரிடம் சிறப்பு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.