தலைக்கு மேலேறிய கடன்.. ஒரு தலைமுறையே அழிந்த சோகம்!

Author: Hariharasudhan
16 January 2025, 6:54 pm

கடன் தொல்லையால் தம்பதி உள்பட 4 பேர் என குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகர் (36) – பாலாமணி (29) தம்பதி. இவர்களுக்கு வந்தனா (10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள், வந்தனா கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே, தனசேகர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகவும், அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே தம்பதி இடையே மீண்டும் கடன் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஒரு விபரீத முடிவை எடுத்து உள்ளனர்.

Family committed suicide in Erode

இதன்படி, நேற்று பிற்பகல், மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசைக் கொலை செய்ய பானம் கொடுத்துள்ளனர். ஆனால், கசப்பு காரணமாக குழந்தைகள் அதனை கீழே துப்பிவிட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், அதற்குள் தனசேகரும், பாலாமணியும் தற்கொலைக்கு முயன்றதால், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!

பின்னர், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். தொடர்ந்து, வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Anupama Parameswaran love statement காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!
  • Leave a Reply