சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
16 January 2025, 6:43 pm

சென்சிட்டி சருமம் என்பது தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் சரியான வகை ப்ராடக்டுகளை தேர்ந்தெடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. இந்த சரும வகை பெரும்பாலும் சுற்றுச்சூழல் காரணிகள், சரும பராமரிப்பு ப்ராடக்டுகள் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும் பாதிக்கப்படலாம். இதனால் சிவத்தல், அரிப்பு, வறட்சி அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் உண்டாக வாய்ப்புள்ளது. சென்சிடிவ் சருமம் வைத்திருப்பவர்கள் அதன் சமநிலையை பராமரிப்பதற்கு பிற வகையான சருமத்தை காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் சென்சிடிவ் சருமத்தை கையாளுவதற்கு உதவும் எளிமையான குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கிளென்சர்

நுரை தள்ளாத மைல்டான கிளன்சர் சென்சிட்டிவ் சருமத்திற்கு சரியானதாக இருக்கும். இது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாது. மேலும் எரிச்சலையும், வறட்சியையும் உண்டாக்காது. கிளிசரின் அல்லது செரமைடுகள் போன்ற ஹைட்ரைட்டிங் பொருட்களால் செய்யப்பட்ட கிளென்சர்களை பயன்படுத்துங்கள். மேலும் சல்பேட்டுகள் மற்றும் ஆல்கஹால் அடிப்படையிலான கிளென்சர்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

மாய்சரைசர் 

சென்சிட்டி சருமம் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள்  தோலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு போராட வேண்டி இருக்கும். எனவே தினமும் ஹைப்போ அலர்ஜெனிக் வாசனை இல்லாத மாய்சரைசர் பயன்படுத்துவது அவசியம். செராமைடுகள், ஹயாலூரோனிக் அமிலம் அல்லது கொலாய்டல் ஓட்மீல் போன்றவை சருமத்தை மீட்டெடுத்து, அவற்றை சரி செய்வதற்கு உதவும்.

வாசனை இல்லாத ப்ராடக்டுகள் 

எப்பொழுதும் வாசனையில்லாத ப்ராடக்டுகளை நீங்கள் பயன்படுத்துவது அவசியம். ஏனெனில் வாசனைக்காக சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் உங்கள் சருமத்தில் எரிச்சல் அல்லது தடிப்புகளை உண்டாக்கலாம்.

பேட்ச் சோதனை

புதிய ப்ராடக்டுகளை உங்களுடைய வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன்பு எப்பொழுதும் ஒரு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது நல்லது. காதுக்கு பின்புறத்தில் அல்லது உள்ளங்கை போன்றவற்றில் புதிய ப்ராடக்டுகளை பயன்படுத்திவிட்டு 48 மணி நேரம் அதனை கண்காணிப்பது அவசியம்.

தினமும் சன் ஸ்கிரீன்

சென்சிடிவ் சருமம் UV கதிர் சேதத்திற்கு எளிதில் ஆளாகும். எனவே மினரல் அடிப்படையிலான சன் ஸ்கிரீன்களை பயன்படுத்துங்கள். சிங்க் ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு போன்றவை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

எளிமையான சரும பராமரிப்பு 

பல்வேறு வகையான ப்ராடக்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உங்களுடைய சருமத்தை சுத்தம் செய்வது அதற்கு தேவையான ஈரப்பதம் வழங்குவது மற்றும் சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஜப்பான் மக்கள் ஸ்லிம்மா இருக்கிறதுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் ஒளிஞ்சிருக்குதா…???

வெந்நீர் 

வெந்நீர் என்பது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி வீக்கத்தை மோசமாக்கலாம். எனவே எப்பொழுதும் சருமத்தை சுத்தம் செய்வதற்கும் குளிப்பதற்கும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply