ரிலீஸ் தேதி குறிச்சாச்சு…இனி தான் ஆட்டம் ஆரம்பம்…அட்டகாசமாக வெளிவந்த விடாமுயற்சி ட்ரைலர்…!
Author: Selvan16 January 2025, 7:47 pm
ஹாலிவுட் தரத்தில் வெளிவந்த விடாமுயற்சி ட்ரைலர்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் பொங்கல் அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.ட்ரைலரில் அஜித்தின் மிரட்டலான நடிப்புடன்,அவரது அசத்தலான கார் ரேஸ் இடம்பெற்று ஹாலிவுட் அளவில் பிரமிக்க வைத்துள்ளது.
இதையும் படியுங்க: சைஃப் அலி கானை குத்தியவரின் புகைப்படம் வெளியீடு…தீவிர விசாரணையில் மும்பை போலீசார்..!
மேலும் ட்ரைலரின் இறுதியில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் பெரு மூச்சு விட்டு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இந்த தடவ படத்தின் ரிலீஸ் எந்த வித தடங்கலும் இன்றி சொன்ன தேதியில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.