காளையும் மரணம், உரிமையாளரும் மரணம் : சிராவயல் மஞ்சுவிரட்டில் சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2025, 8:00 pm
சிவகங்கை திருப்பத்தூர் அருகே ஆவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தைனீஸ் ராஜா. தற்போது வேலூரில் வசித்து வரும் நிலையில், தனது உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரிச்சந்திரனுக்கே அல்வா கொடுத்த கள்ளக்காதலி.. ₹2 லட்சத்துக்காக நடந்த உல்லாசக் கொலை!
இன்று தனது காளைகளை சிறாவயல் மஞ்சுவிரட்டுக்கு அழைத்து வந்து விட்டு ஊர் திருப்பும் போது, கயிற்றை உருவிக்கொண்டு காளை கண்மாய்க்குள் பாய்ந்துள்ளது.
தைனீஸ் ராஜா கண்மாயில் இறங்கி மாட்டை காப்பாற்ற முயன்ற போது நீரில் கிடந்த தாமரை கொடி காலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயின் நடுப்பகுதிக்குச் சென்ற மாடும் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இறந்தவரின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சிறாவயல் மஞ்சுவிரட்டை கான வந்த பார்வையாள்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.