காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!

Author: Selvan
16 January 2025, 8:59 pm

காதலை எதிர்க்கும் அனுபமா பரமேஸ்வரன்

மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்பு தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து,ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.அதை தொடர்ந்து ரவிமோகன் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் படியுங்க: ரிலீஸ் தேதி குறிச்சாச்சு…இனி தான் ஆட்டம் ஆரம்பம்…அட்டகாசமாக வெளிவந்த விடாமுயற்சி ட்ரைலர்…!

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சமீபத்தில் காதல் குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்ட போது,அவர் சொன்ன பதில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தை ஒரு பொய்யான வார்த்தை என கூறியுள்ளார்.மேலும் என் உயிர் நீதானே,நீ இல்லாமல் நான் எப்படி வாழ என்று சொல்லக்கூடிய ஒரு நச்சுக்காதலில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வந்துருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.அனுபமா பரமேஸ்வரணின் இந்த காதல் குறித்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Leave a Reply