எதிர்பாரா உச்சம் தொடும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி உயர்வு!

Author: Hariharasudhan
17 January 2025, 10:25 am

சென்னையில் இன்று (ஜன.17) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (ஜன.17) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: அது விதிகளின் படி நடந்தது.. இன்பநிதி விவகாரத்தில் மதுரை ஆட்சியர் விளக்கம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 127 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 65 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் ஒரு ரூபாய் உயர்ந்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply