’நாதக உடன் போட்டியெல்லாம் காலக்கொடுமை’.. திமுக வேட்பாளர் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan17 January 2025, 5:56 pm
நாதக உடன் போட்டி என்பது காலத்தின் கொடுமை என ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
ஈரோடு: பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு மஞ்சள் மாநகரமாக இருந்தது. ஆனால், தற்போது புற்றுநோய் மாநகரமாக மாறி, மக்கள் வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். நெசவாளர்களின் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம், திமுகவின் கொடுமையான ஆட்சி, அராஜக ஆட்சி தான். அதனை வேரோடுப் பிடுங்கி எறியாமல் எங்களுக்கு வேறு பணி இல்லை” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், “பொய்யும் புரட்டும் பேசிக்கொண்டு இருக்கின்றவர்கள், அரசியல் கட்சிகளிலேயே அந்தக் கட்சி ஒரு வியாதி. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. நவீன அரவியல் வளர்ச்சியில் நாடு எங்கேயோ சென்று கொண்டிருக்கையில், ‘கட்டைவண்டியில் போ’ எனச் சொல்பவரை தலைவராக வைத்துக் கொண்டு, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து, அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாகப் பார்க்கிறேன்.
இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!
தனிப்பட்ட முறையில் இதைக் காலத்தின் கொடுமையாகத்தான் கருதுகிறேன்” எனக் கூறினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான அதிமுக, அதனுடன் உள்ள தேமுதிக மற்றும் பாஜக, பாமக மற்றும் விஜயின் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன.