கிராமத்து ஸ்டைல்ல மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு!!!

Author: Hemalatha Ramkumar
17 January 2025, 7:55 pm

கிராமத்து சமையல் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவுக்கு கம கம என்று பிரமாதமாக இருக்கும் என்பது அனைவரது கருத்து. அவர்கள் எப்பொழுதும் கடைகளில் இருந்து மசாலாக்களை வாங்கி பயன்படுத்தாமல் ஃபிரஷாக அம்மியில் அரைத்து பயன்படுத்துவதே இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம். அதிலும் கறி குழம்பு, மீன் குழம்பு என்றால் கேட்கவா வேண்டும். இந்த பதிவில் கிராமத்து முறைப்படி கறி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இந்த கறி குழம்பு வெள்ளை சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றிற்கும் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் 

சிக்கனுக்கு:-

நாட்டுக்கோழி – 1 கிலோ

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் -1 கப்

அரைப்பதற்கு 

துருவிய தேங்காய் – 1 கப்

சின்ன வெங்காயம் – 1/2 கிலோ 

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை -1 கைப்பிடி அளவு

மசாலா பொருட்கள் 

பட்டை – 4 இன்ச் அளவு 

சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 10 

கிராம்பு – 10

குழம்புக்கு தேவையான பொருட்கள் 

எண்ணெய் – 1/4 கப் 

இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன் 

தக்காளி – 3 

மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன் 

மல்லி பொடி – 3 டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு – தேவைக்கேற்ப 

தண்ணீர் – தேவையான அளவு 

கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு பொடியாக நறுக்கியது

தாளிப்பதற்கு 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

சின்ன வெங்காயம் – 10 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை 

*முதலில் சிக்கனோடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பிரஷர் குக்கரில் குறைவான தீயில் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். 

*சிக்கனை நீங்கள் சமைப்பதற்கு முன்பு நன்கு கழிவில் சுத்தம் செய்திருக்க வேண்டும். 

*ஒருவேளை உங்களுக்கு நாட்டுக்கோழி கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கு 2 விசில் போதுமானது.

*தேங்காயை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நோய்களை ஓட ஓட விரட்ட சரியான டிரிங்க் இது தான்!!!

*சின்ன வெங்காயம், 1/2 கிலோ சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

*பிறகு மசாலா பொருட்களையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். 

*இப்பொழுது கறி குழம்பு வைப்பதற்கு ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதலில் எண்ணெயை சூடாக்கி கொள்ளலாம். 

*அதில் அரைத்து வைத்த மசாலா பொடி சேர்த்து ஒரு சில வினாடிகளுக்கு வதக்கிக் கொள்ளவும். 

*அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*அடுத்து வேக வைத்த சிக்கனை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளலாம். 

*அடுத்ததாக அரைத்த சின்ன வெங்காயம் பேஸ்டை சேர்த்து 15 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க வைத்துக் கொள்ளலாம். 

*இப்போது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

*அரைத்த தேங்காயை ஊற்றி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். 

*இறுதியாக கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

*இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாக வறுபட்டதும் அதனை குழம்பில் ஊற்றி விடலாம். 

*இறுதியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply