நிறுத்தவே முடியாத தலைமுடி உதிர்வை சமாளிக்க கூட இயற்கை ஒரு வழி சொல்லுது!!!

Author: Hemalatha Ramkumar
18 January 2025, 11:51 am

இன்றைய பிசியான வாழ்க்கையில் பல தங்களுடைய தலைமுடி பிரச்சனைகளை சமாளிப்பதற்கு கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் ப்ராடக்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ப்ராடக்டுகள் நல்லதை காட்டிலும் நமக்கு அதிக தீங்குகளை ஏற்படுத்துகிறது. இதில் மயிர்கால்களில் நாள்பட்ட சேதம் அல்லது எரிச்சல் போன்றவை உண்டாகிறது. இயற்கையான தலைமுடி பராமரிப்பு என்பது தலைமுடியின் இயற்கையான அழகை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் மயிர் கால்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துகிறது.

ஆரோக்கியமான, பளபளப்பான தலைமுடியை பெறுவதற்கு உதவும் பல்வேறு இயற்கை தீர்வுகள் உள்ளன. சரியான பொருட்கள் மற்றும் நுட்பங்களை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் தலைமுடியின் அமைப்பையும், பளபளப்பையும், வலிமையும் உங்களால் மேம்படுத்த முடியும். அப்படி உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும் சில இயற்கையான தலைமுடி பராமரிப்பு ஹேக்குகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் 

இதனை நீங்கள் ஆழமான ஒரு கண்டிஷனராக பயன்படுத்தலாம். சிறிதளவு தேங்காய் எண்ணெயை சூடாக்கி, வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும் பொழுது அதனை மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் அல்லது இரவு முழுவதும் இதனை ஊற வைத்துவிட்டு,  கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.

கற்றாழை 

கற்றாழையில் உள்ள என்சைம்கள் மயிர் கால்களில் உள்ள இறந்த தோல் செல்களை சரிசெய்து தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே: உணவுக்கு பிறகு இந்த தண்ணீர் ஒரு கிளாஸ் குடிச்சாலே செரிமானம் பிரமாதமா நடக்கும்!!!

ஆப்பிள் சைடர் வினிகர் 

இதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கப் தண்ணீருடன் கலந்து தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு இந்த தண்ணீர் கொண்டு தலைமுடியை அலசுங்கள்.

வெந்தயம் 

வெந்தயம் என்பது குறிப்பாக தலைமுடி மெலிந்து போதல் மற்றும் தலைமுடி இழப்பை தடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மயிர் கால்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதற்கு தேவையான போஷாக்கை வழங்குவதன் மூலமாக தலைமுடி உதிர்வை தடுக்கிறது.

அவகாடோ 

அவகாடோ ஹேர் மாஸ்க் செய்வதற்கு பழுத்த ஒரு அவகாடோ பழத்தை மசித்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை மயிர் கால்கள் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Jayam Ravi and Aarthi court case மீண்டும் சமரச பேச்சு…ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நடந்த திடீர் திருப்பம்..!
  • Leave a Reply