மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!
Author: Selvan18 January 2025, 1:11 pm
இயக்குனர் ஆகிறார் ஜெயம் ரவி
கடந்த சில நாட்களாக ரவி மோகன் பல பேட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய சினிமா அனுபவத்தை பற்றியும்,கடந்த கால நிகழ்வுகளை பற்றியும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய மகனை பற்றி உருக்கமாக பேசிய தகவல் வைரல் ஆகி வருகிறது.தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரவி மோகன்,ஆனால் கடந்த சில வருடமாக இவர் நடிக்கின்ற படம் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் வசூலில் திணறி வருகிறது.
இதற்கு அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில்லை என்ற குற்றசாட்டுகள் எழுந்தன,அதுமட்டுமில்லாமல் ரவி மோகனின் தனிப்பட்ட குடும்ப காரணங்களும் அவருக்கு தடையாக அமைந்தது என்று கூறப்பட்டது.இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,திடீரென அவரது மனைவியை பிரிவதாக அறிவித்தார்,இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்,சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று இனி ரசிகர்கள் அழைக்க வேண்டாம்,அதற்கு பதிலாக ரவி மோகன் அல்லது ரவி என்று அழையுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் அவர் கூறியது,நான் நடிகன் ஆகவில்லை என்றால் இயக்குனராக மாறியிருப்பேன் என்று கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய மகன் ஆரவ் கூட சேர்ந்து சீக்கிரமே ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்.அதற்கான கதையை என்னுடைய அப்பா ரெடி பண்ணி வைத்துள்ளார்.விரைவில் என்னுடைய இயக்கத்தில்,நானும் என்னுடைய மகன் ஆரவ்வும் சேர்ந்து நடிக்க இருக்கிறறோம் என்ற தகவலை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.