இன்னும் 13 அமாவாசைகள் தான்.. திமுகவுக்கு கெடு விதித்த எடப்பாடி பழனிசாமி!

Author: Hariharasudhan
19 January 2025, 9:57 am

இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனையடுத்து, அவர் மேடையில் பேசுகையில், “தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளுப் பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது.

எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை ஜெயலலிதா நிறைவேற்றினார். இந்த இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை, அவர்களுக்கு நாம் தான் வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம், நம்முடைய தலைவர்கள் தான். தொண்டர்கள் நிறைந்த கட்சி தான் அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை, திமுகவில் வாரிசு உள்ளது. அதனை ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும், உடைக்கவும் பலர் முயற்சி செய்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வப் பிறவிகள் உருவாக்கிய கட்சி. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும், அது நிலைக்காது, சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது.

Edappadi Palaniswami slams DMK

யாரும் அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அதனை முறியடிக்க வேண்டும். 2026ஆம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் உள்ளது. இந்த ஆட்சியில், நான்கு ஆண்டு காலம் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்தார்? தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் அவர் செய்த சாதனை.

இதையும் படிங்க: விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!

போட்டோஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு. ஒரு குழு அமைப்பார், இந்த அரசு ஒரு குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை. ரேஷன் கடையில் தற்போது பொருட்கள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கின்றனர்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் ஒரு செயலற்ற முதலமைச்சர். அவர் பொம்மை முதலமைச்சராக உள்ளார்” எனப் பேசினார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!
  • Leave a Reply