குளிர்கால சோம்பலை நொடிப்பொழுதில் அகற்றும் உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
20 January 2025, 11:28 am

குளிர்காலம் வந்து விட்டாலே கூடவே நமக்கு சோம்பேறித்தனமும் வந்துவிடுகிறது. இந்த குளிர்ந்த வானிலையில் வீட்டிற்குள்ளேயே கதகதப்பான போர்வைக்குள் அமர்ந்து சூடான டீ காபி குடித்துக் கொண்டு, டிவி அல்லது போன் பார்ப்பதையே பெரும்பாலான நபர்கள் விரும்புகிறோம். ஆனால் இந்த குளிர்கால சோம்பேறித்தனத்தை எதிர்த்து போராடுவதற்கு நமக்கு உதவ ஒரு சில உணவுகள் உள்ளன. அவை நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றலை வழங்கி நம்மை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்டுகள் உடலுக்கு தேவையான போஷாக்கை சிறப்பாக வழங்குவதன் மூலமாக நாள் முழுவதும் நம்மை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறது.

வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் வலிமை மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சூப்பர் ஃபுட்டுகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆகவே இந்த குளிர்கால சோம்பேறித்தனத்தை எதிர்த்து போராடவும், அதே நேரத்தில் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும் சில சூப்பர் ஃபுட்டுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரை 

கீரையில் இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் A, C மற்றும் K ஆகியவை காணப்படுகிறது. இதனால் இது குளிர்கால உணவுக்கு ஏற்ற ஒரு பொருளாக அமைகிறது. கீரையில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் சோர்வை எதிர்த்து போராடும் வகையில் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சோம்பேறித்தனத்தை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த உணவு பொருள் இது. இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

சியா விதைகள்

குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பேறித்தனத்தை எதிர்ப்பதற்கு தேவையான தொடர்ச்சியான ஆற்றலை வழங்குவதற்கு சியா விதைகளில் புரோட்டீன், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் சியா விதைகளில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குகிறது.

இதையும் படிக்கலாமே: ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா… பிரேக் ஃபாஸ்டுக்கு பெஸ்டுன்னு சொல்றாங்க!!!

இஞ்சி 

இஞ்சியை உங்களுடைய அன்றாட உணவு அல்லது தேநீராக வைத்து நீங்கள் பருகலாம். இது இழந்த ஆற்றலை மீட்டுக் கொடுத்து, மனத் தெளிவை வழங்கி உங்களுடைய கவனிப்பு திறனை மேம்படுத்துகிறது.

பாதாம் பருப்பு 

ஊட்டச்சத்து அதிகம் காணப்படும் பாதாம் பருப்பு குளிர்காலத்தில் நமக்கு தேவையான ஆற்றலை வழங்க வல்லது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, ஆற்றல் அளவுகள் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!
  • Leave a Reply