வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!
Author: Selvan20 January 2025, 3:53 pm
COME BACK கொடுக்க உள்ள சந்தானம்
தற்போது சமுக வலைத்தளத்தில் ஆர்யா,சந்தானம்,செல்வராகவன்,கெளதம் வாசுதேவ் மேனன் என பலர் NEXT LEVEL வாசகத்துடன் தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனால் ரசிகர்கள் பலர் இந்த NEXT LEVEL என்னவா இருக்கும் என யோசிச்சிட்டு வருகின்றனர்.
#NextLevel Sambavam 😃⌛#Santhanam | #Selvaraghavan#GVM | #Arya | #Kasthuri pic.twitter.com/PZak4O56Zr
— Cinemapayyan (@cinemapayyan) January 20, 2025
இந்த சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த டி.டி ரிட்டர்ன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது,இதனைத் தொடர்ந்து தற்போது அதனுடைய இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இதையும் படியுங்க: இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசிய நயன்தாரா…சர்ச்சையில் சிக்கிய வைரல் வீடியோ…விக்னேஷ் சிவன் ஷாக்..!
பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஆர்யா நடிக்க உள்ளார்.மேலும் இயக்குனர் கெளதம் வாசுதேவ்,செல்வராகவன் என பலர் நடிக்க உள்ளனர்.இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்ளுக்கு தெரிவிக்கும் விதமாக படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் NEXT LEVEL-க்கு நாங்க ரெடி என தங்களுடைய X-தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பொங்கல் அன்று வெளியான மதகதராஜா திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி வேற லெவலாக இருந்ததால்,அவரை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சந்தானத்தை மீண்டும் காமெடியனாக நடிக்க வருமாறு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது டி.டி ரிட்டர்ன்ஸ் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் சந்தானம் ஆர்யா கூட்டணி இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.