வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!
Author: Selvan20 January 2025, 6:05 pm
முகம் சுளிக்க வைத்த மிஸ்கின் பேச்சு
சமீபத்தில் சென்னையில் பாட்டில் ராதா திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவின் மேடையில் இயக்குனரும் மற்றும் நடிகருமான மிஸ்கின் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி விவாத பொருளாக மாறியுள்ளது.
இவருடைய மேடைப்பேச்சுக்கு இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஜான் மகேந்திரன் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.இந்த பட விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் வெற்றிமாறன்,அமீர் உட்பட பல திரைபிரபலங்கள் அங்கே இருந்தனர்,அப்போது மேடையில் பேச தொடங்கிய மிஸ்கின் முதலில் இசையானி இளையராஜாவை மரியாதையை இல்லாமல் பேசினார்,தொடர்ந்து பேசிய அவர் தற்போது சமூக ஊடங்களில் பலர் தாங்கள் நடிகர்கள் என்று ரீல்ஸ் பதிவிட்டு வருவதை கொச்சையான வார்த்தைகளால் திட்டி அவர்கள் நடிகர்களே கிடையாது,அது நடிப்பு இல்ல சினிமாவிற்கு வைக்கின்ற பெரிய ஆப்பு என சொன்னார்,அப்போது மேடையில் இருந்த பலரும் அவர் பேச பேச கைதட்டி சிரித்துக்கொண்டு இருந்தனர்.
இதையும் படியுங்க: சீரியல் நடிகரை கரம் பிடித்த லப்பர் பந்து நடிகை…வாழ்த்து மழையில் புதுமண ஜோடி..!
அவர் சொல்ல வருகின்ற கருத்து சரியானதாக இருந்தாலும் அதை மேடை நாகரித்தோடு சொல்லாமல் கொச்சையாக கெட்ட வார்த்தை பயன்படுத்தி சொன்னதை பலரும் எதிர்த்து விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும் என்று நடனமாட வைத்து பெண்களை தவறான பொருளாக சித்தரிக்கும் போது அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது,ஊருக்கு சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சோ உங்களை யோசித்து பேசுங்க மிஸ்கின் அவர்களே என பதிவிட்டிருந்தார்.
மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்… என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது.. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே.. #mysskin #Bottle_Radha https://t.co/2Ngt8J4p1B
— leninbharathi (@leninbharathi1) January 19, 2025
அவருடைய பதிவிற்கு விஜயின் சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் சபாஷ் லெனின் என கமெண்ட் செய்துள்ளார்.மேலும் ப்ளூ சட்டை மாறனும் மிஷ்கினின் இந்த ஆபாச பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் மௌனம் காப்பது ஏன் என தன்னுடைய கேள்வியை எழுப்பியுள்ளார்.
கோடம்பாக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி:/
— Blue Sattai Maran (@tamiltalkies) January 19, 2025
நேற்று பா.ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடித்த பாட்டில் ராதா ட்ரைலர் வெளியீடு..
மேடையேறிய ஆபாச பேச்சாளர் மிஷ்கின் தன்னை பெரிய குடிகாரன் என்றும்.. வெற்றி மாறன், அமீர் குடிப்பதில்லை என்றும் கூறினார்.
பிறகு இளையராஜாவை ஒருமையில்… pic.twitter.com/aIN7X3jvct