எங்களை கொலை பண்ண பிளான் போட்டிருக்காங்க… போலீசிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2025, 6:49 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நக்க்ஷத்திரா. இவர் கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையும் படியுங்க: வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாள் அடைவில் அது காதலாக மாறியது.
இந்நிலையில் இவர்களது காதல் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அடுத்து இந்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அந்த இளம் பெண் நக்க்ஷத்திராவிற்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் அந்த இளம்பெண்ணை வீட்டில் வெளியே அனுப்பாமல் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் கிருஷ்ணமூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்தார்.
மேலும் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரது கல்லூரி சான்றிதழ்கள் அவர்களிடம் உள்ளதால் கல்லூரி படிப்பை தொடர அதைப் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.