பதுங்கிப் பார்க்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan21 January 2025, 10:28 am
சென்னையில், இன்று (ஜன.21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஆனால், நேற்று அதிகரித்த தங்கம் விலை, இன்று அதே நிலையில் காணப்படுகிறது. இதன்படி, இன்று (ஜன.21) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 127 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 65 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.