ஆனந்தை மட்டும் வைத்து ஒன்னும் செய்ய முடியாது.. விஜய்க்கு எஸ்.வி.சேகர் சொன்ன அட்வைஸ்!

Author: Hariharasudhan
21 January 2025, 11:59 am

சினிமா படப்பிடிப்பு போன்று விஜய் ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார். என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர், “விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா படப்பிடிப்பு போன்று ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார்.

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. ஒருவேளை, தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50வது ஆண்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து மேலும் பேசிய எஸ்.வி.சேகர், “இன்றைய காலக்கட்டத்திலும் மாதத்திற்கு இரண்டு நாடகம் போடுகிறோம்.

S Ve Sheker about TVK Vijay

முதலமைச்சர் எனது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால், அவருக்காக நிச்சயமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். உதாரணமாக, 3 பிராமணர்களுக்கு எம்எல்ஏ பதவி, அந்தணர் நல வாரியம் போன்றவை அமைக்கப்பட வேண்டும் ஆகியவை. இதெல்லாம் நடந்தால் திமுகவிற்கு நான் பிரச்சாரம் செய்வேன்.

எனக்கு 75 வயதாகிவிட்டது என்பதால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே கூறிவிட்டேன். இருப்பினும், எனது மகன் திமுகவில் விருப்பம் இருந்தால் இணையலாம். தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால், நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

மேலும், நேற்று பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பொடனூரில் மக்கள் மத்தியில் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். இருப்பினும், கட்சி தொடங்கி ஒரு வருடம் முடியும் தருவாயில் தான் களத்திற்கு விஜய் வந்துள்ளதற்கு சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply