திடீரென சரிந்த கான்கிரீட் வீடு.. வைரலான வீடியோ.. கோவை மாநகராட்சி கூறுவதென்ன?

Author: Hariharasudhan
21 January 2025, 3:15 pm

கோவை சங்கனூர் அருகே கான்கிரீட் வீடு சரிந்து இடிந்து விழும் வீடியோ வைரலான நிலையில், மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் முதல் காந்திபுரம் வரை, சங்கனூர் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் சங்கனூர் கால்வாயை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளில் உள்ளவர்களை காலி செய்ய மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு காலி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பணியின் போது வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் சுல்தானா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளில் இருப்பவர்களை காலி செய்ய வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஓடை அருகே இருந்த கான்கிரீட் வீடு இடிந்து விழந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

Coimbatore House Collapsing Viral Video

மேலும், இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், “சங்கனூர் ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைத்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஓடைக்கரையோரம் இருப்பவர்களுக்கு ஆக்கிரமிப்புகளைக் காலி செய்ய அறிவுறுத்திவிட்டோம்.

இதையும் படிங்க: பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஊழியர் கைது!

தற்போது 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சுவருடன் கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், சுரேஷ் என்பவரின் வீடு மட்டுமல்லாது, இடிந்த அதிர்வில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply