‘அரசியலுக்காக குழப்பத்தை ஏற்படுத்தும் விஜய்’.. தமிழிசை கேள்வி!

Author: Hariharasudhan
21 January 2025, 5:08 pm

ஒரு விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வது என்பது சினிமாவில் ஒரு டேக் எடுப்பது போல் சாதாரண விஷயம் அல்ல என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “விஜய் ஆளுங்கட்சியை எதிர்த்து பேசி இருக்கிறார் என்பதை விட, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகப் பேசியிருக்கிறார் என்பதாகவே நான் பார்க்கிறேன். விமான நிலையம் அமைக்க இடம் பார்த்துக் கொடுத்தது ஆளும் அரசு தான்.

அதிலும், நான்கு இடங்களைத் தேர்வு செய்து, அதில் இரண்டு இடங்களை இறுதி செய்த பின்னரே, முறையாக விமான நிலையம் அமைக்க இடம் உறுதி செய்யப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்ட இடம் என்பது, அங்கு போராடும் மக்களின் நலனுக்காகவும் தான், மேலும், பின்வரும் அவர்களின் வாரிசுகளின் நலனுக்காகவும் தான்.

Tamilisai about TVK Vijay

இதனைக் கூறுவதால் எங்களை விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது முறையாகாது. நாங்கள் இது தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாகவேப் பார்க்கிறோம். விஜய் சொல்வதைப் போல் வேறு இடம் கொடுப்பது என்றால் கொடுக்கச் சொல்லுங்கள், ஆனால், ஒரு விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வது என்பது சினிமாவில் ஒரு டேக் எடுப்பது போல் சாதாரண விஷயம் அல்ல.

இதையும் படிங்க: மீண்டும் அலப்பறை செய்த ஜெயிலர் பட வில்லன்…நடவடிக்கை எடுக்குமா கேரளா சினிமா துறை..!

மீனம்பாக்கம், பெங்களூரு விமான நிலையங்களுக்கான தொலைத் தொடர்புகள், டிஜிட்டல் தொடர்பு, சாலை தொடர்புகளை எல்லாம் சரியாக ஆய்வு செய்த பின்னர் தான் தமிழக அரசு இந்த இடத்தை தேர்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடும்போதெல்லாம் மறந்துவிட்டு, இப்போது பறந்து வந்து இடத்தை மாற்றுங்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசியலுக்காக பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!