ரூ.60 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Author: Hariharasudhan22 January 2025, 10:37 am
சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதே நிலையில் காணப்பட்டது. ஆனால், இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது. இதன்படி, இன்று (ஜன.22) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 525 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதையும் படிங்க: மக்களிடம் பரபரப்பை கிளப்பவே விஜய் நினைக்கிறார்… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!!
இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 209 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 65 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.