திருமணமாகி 6 மாதமே ஆன பிரபல ரவுடி படுகொலை.. போலீஸ் விசாரணையில் திடுக்..!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2025, 5:40 pm
ஆறு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ரவுடி படுகொலை செய்யயப்பட்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம் மாமிட்லகட்டா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா சுமார் 20-க்கும் மேற்பட்ட அடிதடி, கொலை ஆகிய வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமினில் விடுதலையாகி வசித்து வந்தார்.
அவர் ஆறு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மாமிட்லகட்டா கிராமத்திற்கு வெளியே கிருஷ்ணாவை அடித்து தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மர்ம நபர்கள் அவருடைய உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று மூசி நதி கால்வாய் அருகே வீசி சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற நபர்கள் கிருஷ்ணா உடல் கிடப்பதை பார்த்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சூர்யா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு அடிதடி, கொலை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய கிருஷ்ணாவின் மரணத்திற்கு காரணம் முன்விரோதமா அல்லது காதல் திருமணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.