பிக் பாஸ் அருணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதா…அப்போ அர்ச்சனா வாழ்க்கை…குழப்பத்தில் ரசிகர்கள்…!
Author: Selvan27 January 2025, 7:10 pm
யார் அந்த சுபத்ரா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் அருண் பிரசாந்த்,இவரும் பிக் பாஸ் அர்ச்சனாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சுபத்திரா அருண் என்பவர் அருண் பிரசாத் தன்னுடைய கணவர் என்பது போல நிறைய பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.மேலும் அந்த ஐடியின் ப்ரொபைலில் என் அர்ஜுன் என்று நடிகர் அருணை டேக் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: இயக்குனராக களமிறங்கும் லப்பர் பந்து நடிகை…குதூகலத்தில் கோலிவுட்..!
அதுமட்டுமில்லாமல் ஐந்து வருட காதல்,பாரதியின் கண்ணம்மா,மை ஹப்பி,சிங்கக்குட்டி,பட்டுக்குட்டி என பதிவிட்டுள்ளார்.மேலும் அருண் பிரசாத்தின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல்,அத்தை என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை சுபத்ரா அருணின் தீவிர ரசிகையாக இருப்பதால் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறாரா,இல்லை அருணின் முதல் மனைவியா இருக்குமா என பல விதமான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதை பற்றி அருணும் சஞ்சனாவும் விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.