ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… சென்னை NIA சோதனையில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2025, 9:58 am
தமிழ்நாட்டில் அடிக்கடி என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று.
ஆனால் இன்று காலை சென்னை மற்றும் மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: 6ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த விபரீதம்.. பள்ளி மாணவர்கள் கைது… ஓசூரில் பரபரப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுமுறை திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடந்தது.
இதில் புரசைவாக்கம் கஸ்தூரி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுளளது.

ஓட்டுநர் அல்பாசித் அமீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் மயிலாடுதுறை திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர். 8 மாதமாக சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டு isis அமைப்புடன் தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது.