‘முதல்வர்கிட்ட கேளுங்க..’ கடுப்பான திருமா.. கூட்டணியில் விரிசல்?

Author: Hariharasudhan
28 January 2025, 11:30 am

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை முதல்வர் பரிசீலிப்பார் என நம்புவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூரில், அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், 76வது குடியரசு தின கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய திருமாவளவன், “யாருமே உள்ளே போகக் கூடாது என்னும் கெடுபிடி வேங்கை வயலில் நிலவுகிறது. இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. தங்கள் மீதே வழக்கு போடப்பட்ட அதிர்ச்சியில், அங்குள்ள மக்கள் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.

அவர்களை பார்ப்பதற்கு விசிக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, உள்ளே சென்றவர்களை கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்துள்ளனர். தற்போது வழக்கறிஞரையும் தடுத்திருப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தப் போக்கினை காவல்துறையும், அரசும் கைவிட வேண்டும்.

Thirumavalavan and MK Stalin

வேங்கை வயல் மக்களைச் சந்திப்பது பற்றி முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். இந்தப் பிரச்னையில், போலீசார் பதிவு செய்திருக்கக்கூடிய குற்றப்பத்திரிகை, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள சூழலில், அனைத்து எதிர்கட்சியினரும் விமர்சித்துள்ள நிலையில், தமிழக அரசு இது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: அஜித்துக்கு பத்மபூஷன்… ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தை : சிலாகித்த ரசிகர்கள்!

இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதன் வாயிலாக ஏற்படவுள்ள பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மாற்று நிலைப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். எங்களது கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வேங்கை வயல் விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தச் சென்ற விசிகவினரைத் தடுத்த போலீசார், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதேநேரம், ஏற்கனவே திமுக – விசிக கூட்டணியில் அவ்வப்போது புகைச்சல் வருவதால், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையசைப்பாரா என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!