பாலியல் குற்றச்சாட்டுகள்.. யூடியூபர்களுக்கு இடையே மோதல்.. சைபர் கிரைம் வரை சென்றது ஏன்?

Author: Hariharasudhan
28 January 2025, 2:42 pm

யூடியூபர் சித்ரா தன்னைப் பற்றி ஆதாரமில்லாத தகவல்களைக் கூறுவதாக யூட்யூபர் உதயா சுமதி மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மதுரை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரபல யூடியூபர் சித்ரா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வேறு சில யூடியூபர்கள் பற்றி பல்வேறு பாலியல் சர்ச்சையான விஷயங்களை அவர் பேசினார். இந்த நிலையில், ஆதாரமின்றி சித்ரா தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் உதயா சுமதி என்பவர், இன்று மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் உதயா சுமதி, “என்னுடைய யூடியூப் சேனலில் எந்த ஆபாசமான வீடியோக்களும் நான் போட்டது கிடையாது. யாரைப் பற்றியும் நான் தரக்குறைவாக பேசியதும் கிடையாது. ஆனால்ம் யூடியூபர் சித்ரா என்பவர், என்னைப் பற்றி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

நான் பணத்திற்காகப் போகிறேன் என்று அவர் குற்றச்சாட்டு சொல்லியுள்ளார். அது உண்மை என்றால், ஆதாரத்தை என்னிடம் காட்டச் சொல்லுங்கள். எனக்கு, என்னுடைய மகனை வளர்ப்பதற்கும், குடும்பத்தைக் கவனிப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. நான் என்னுடைய வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே தவிர, அந்த சித்ரா யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவருடைய வீடியோக்களையும் நான் பார்த்தது கிடையாது.

Youtuber Udhaya Sumathi

என்னுடைய கணவர் இல்லை, எனவே நான் தனியாக இருக்கிறேன் என்றுதான் அந்தப் பெண் என் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, யூடியூபர் சித்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “பல யூடியூபர்களின் சம்பளத்தை சில யூடியூபர்கள் ஹேக் செய்து, தங்களுடைய அக்கவுண்ட்டுக்கு வருவது போலச் செய்து விடுகிறார்கள்.

இதையும் படிங்க: 15 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்… அதிர்ச்சி சம்பவம்!

என்னுடைய சம்பளம் யூடியூபர் திவ்யா கள்ளச்சி அக்கவுண்ட்டுக்கு மாறி இருந்தது, அது பற்றி நான் அவரிடம் கேட்டேன். திவ்யா கள்ளச்சி எனக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே, அவரைச் சந்தித்து என்னுடைய பணத்தை வாங்குவதற்காக போயிருந்தேன். அங்கு, சில குழந்தைகளை திவ்யா கள்ளச்சி அடைத்து வைத்திருந்தார். அந்தக் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக என்னிடம் கூறினர்” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

  • Ilayaraja Symphony நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!