எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை.. RECORD BREAK செய்த ஜன நாயகன்!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2025, 10:43 am
தமிழ் சினிமாவில்ன வசூல் மன்னன், வசூல் சக்ரவர்த்தி என அழைக்கப்படும் உச்ச நடிகர் விஜய். இவர் தனது கடைசி படம் என தளபதி 69வது படத்தை அறிவித்தார்.
இதன் பின்னர் வர் அரசியலில் குதிக்க உள்ளதால் தளபதி 69வது படத்திற்கு எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே எகிறியது. படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளார். பூஜா ஹெக்டே,பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியால் என நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர்.
இதையும் படியுங்க: இமாலய உச்சம் தொட்டம் தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவு உயர்வா?
இதனிடையே ஜனவரி 26 அன்று படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. ஜன நாயகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் அரசியல் சார்ந்த படம் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஓவர் சீஸ் உரிமை மட்டும் 75 கோடி ரூபாய் வரை விலை போயுள்ளது. அதாவது எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது இல்லை என கூறப்படுகிறது.