நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய கருக்கா வினோத்.. பரபரப்பான நிமிடங்கள்!

Author: Hariharasudhan
29 January 2025, 6:49 pm

வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், நீதிபதியை நோக்கி காலணியை வீசியதால் பரபரப்பு நிலவியது.

சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில், ரவுடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடரபிருக்கலாம் என்ற சந்தேகத்தால், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Karukka Vinoth

அப்போது, திடீரென கருக்கா வினோத், தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நீதிபதியை நோக்கி வீசியுள்ளார். இதில், ஒரு செருப்பு நீதிபதியின் முன்பிருந்த மேசையின் மீதும், மற்றொரு காலணி நீதிபதி முன்பும் விழுந்துள்ளது. இதனால் நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் நம்பிக்’கை’யை நினைவுபடுத்திய விஜய்.. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!

பின்னர், உடனே அங்கிருந்த போலீசார் கருக்கா வினோத்தை அப்புறப்படுத்தினர். அப்போது, கருக்கா வினோத், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என முழக்கமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மீண்டும் கருக்கா வினோத் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ