ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!
Author: Selvan1 February 2025, 12:55 pm
ரசிகைகளுக்கு முத்த மழை பொழிந்த உதித் நாராயணன்
பிரபல பின்னணி பாடகர் ஒருவர் மேடையில் பாடி கொண்டிருக்கு போது அவரிடம் புகைப்படம் எடுக்க வந்த ரசிகைக்கு,திடீரென முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஹிந்தி,தெலுங்கு,தமிழ்,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் தன்னுடைய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் உதித் நாராயணன்,70 வயதாகும் இவர் தன்னுடைய பாடல்கள் மூலம் பத்ம பூஷன் விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இதையும் படியுங்க: காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. சமந்தா பாணியில் பதிவு போட்டதால் சர்ச்சை!
இந்த நிலையில் நேரலை இசை நிகழ்ச்சியில் உதித் நாராயணின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.இவர் மேடையில் “டிப் டிப் பர்சா பானி”என்ற பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது,அவரது குரலில் மயங்கிய தீவிர ரசிகை ஒருவர் புகைப்படம் எடுக்க மேடையின் அருகே வந்தார்,அப்போது அந்த பெண் ரசிகர் புகைப்படம் எடுத்த பிறகு உதித் நாராயணனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.அப்போது அவர் திடீரென பெண் ரசிகையின் தலையை பிடித்து அவரது உதட்டில் முத்தம் கொடுத்து,அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
Udit narayan, tham jao sir. 😭😭 pic.twitter.com/AtIYhYt6ZX
— Prayag (@theprayagtiwari) January 31, 2025
மேலும் இன்னொரு பெண் ரசிகை ஒருவர் புகைப்படம் எடுத்த போது அவருடைய கன்னத்திலும் முத்தம் கொடுத்தார்,இந்த நிகழ்வை அங்கிருந்த மற்ற ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி,உதித் நாராயனுக்கு எதிராக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஒரு அனுபவமுள்ள ஒரு திரைப்பிரபலம் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.