அரசு மருத்துவமனை வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை.. சிவகங்கையில் பதற்றம்!

Author: Hariharasudhan
1 February 2025, 3:57 pm

சிவகங்கை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வாசல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில், நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு உள்ளார். இதில், அவரின் முகம், கை, கால், தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு அலறித் துடித்துள்ளார்.

இதன்படி, சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், அந்த இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மேல் சிகிச்சைக்காக சிவகங்கைக்கும், அதனைத் தொடர்ந்து மதுரைக்கும் இளைஞர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Youth Murder in Sivaganga

ஆனால், மதுரைக்குச் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இளைஞரின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர், திருப்பத்தூர் மின் நகர் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவரின் மகன் சண்முகவேல் என்ற சண்முகம் (27) என தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மாயாஜால அறிக்கை.. பீகார் பட்ஜெட்.. இபிஎஸ் கடும் விமர்சனம்!

மேலும், அவரை நான்கு பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!