இசைக்கருவிகள் இல்லாமல் பாடலா… என்னங்க சொல்றீங்க…ஏ.ஆர்.ரகுமானின் மாயாஜாலம்..!
Author: Selvan1 February 2025, 4:17 pm
கோரஸ் மூலம் உருவான ஹிட் பாடல்
இசைப்புயல் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் ஏ ஆர் ரகுமான் மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.
இதையும் படியுங்க: ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!
இப்படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்து குவிந்தன.ஒரு பாடல் என்று சொன்னால் அதற்கு பின்னணி இசைக்காக பல இசைக்கருவிகளை பயன்படுத்துவார்கள்,ஆனால் ஏ ஆர் ரகுமான் எந்த ஒரு இசைக்கருவிகளையும் பயன்படுத்தாமல் ஒரு பாடலை இயற்றியுள்ளார்.
அந்த பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திருடா திருடா படத்தில் வரும் ராசாத்தி என் உசுரு என்ற மெலடி பாடல் தான்,இந்த பாடலை சாகுல் ஹமீது பாடி இருப்பார்,இப்பாடலில் இசைக்கருவிகளுக்கு பதிலாக ஏ ஆர் ரகுமான் அகபெல்லா எனப்படும் கோரஸ் உத்தியை பயன்படுத்தி அசத்தியிருப்பார்.
பாடலை கேட்கும் போது பின்னணி இசை இல்லை என்பதை தெரியாத அளவிற்கு மிக கச்சிதமாக உருவாக்கியிருப்பார்.இதனால் தான் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மத்தியில் இசைப்புயலாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.