சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம்…கொத்தா தூக்கிய பிரபல இயக்குனர்…!
Author: Selvan1 February 2025, 6:30 pm
KGF இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை
KGF திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல்.அதிலும் குறிப்பாக KGF-2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இதையும் படியுங்க: அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!
இந்த நிலையில் இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.நீண்ட காலமாக இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட பிரசாந்த் நீலுக்கு,தற்போது சரியான நேரம் கைகூடி வந்துள்ளது.
இப்படத்திற்கு ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்தை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் தெலுங்கில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.தற்போது இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த சூழலில் பிரபல இயக்குனர் பிரதீப் நீலுடன் தற்போது இணையவுள்ளதால்,இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் சீனா,பூட்டான் போன்ற வெளிநாடுகளிலும் ஷூட் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.