‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!

Author: Selvan
1 February 2025, 9:02 pm

நடிகர் சிவகுமாருடன் நடந்த நிகழ்வை பகிர்ந்த மணிகண்டன்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களுக்கு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருபவர் நடிகர் மணிகண்டன்.ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வாழ்க்கையை தொடங்கி பின்பு,சிறு சிறு ரோலில் நடித்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.

இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த நிலையில் குடும்பஸ்தன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கடந்து வந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Manikandan about Sivakumar

அப்போது நடிகர் சிவகுமார் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார்.அதாவது சிவகுமார் சார் என் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்,எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுத்து,அதை படிக்க சொல்லுவார்,ஒருமுறை என்னிடம் டீ காபி அதிகமா குடிக்கிறியாமே என்று கேட்டார்,ஆமா சார் சினிமால இருக்கறதுனால தவிர்க்க முடியல என்று சொன்னேன்,இனிமேல் டீ,காபி குடிச்ச உன்னை தொலைச்சுப்புடுவேன் பாத்துக்கோ,திருக்குறள் புக் முதல்ல படிச்சியா…உனக்கு கொடுத்து எவ்ளோ நாள் ஆச்சு..என்று மிரட்டும் விதமாக என்னிடம் அன்பு காட்டுவர் என மணிகண்டன் அந்த பேட்டியில் கூறிருப்பார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!
  • Leave a Reply