ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்.. அண்ணன் சொன்னாரு பாரு.. ஆக்ரோஷமாக பேசிய சீமான்!
Author: Hariharasudhan2 February 2025, 11:45 am
இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான் என பிரபாகரனிடம் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “துப்பாக்குச் சுடும் பயிற்சி எடுத்தபோது, பிரபாகரன் துப்பாக்கி பற்றி பாடம் எடுத்தார். ஏகே 74 துப்பாக்கி சிறியதாக குச்சி மாதிரி இருக்கும்.
தோட்டா, அரிசி மாதிரி தான் இருக்கும். சுட்டுக்கொண்டே இருக்கும்போது அண்ணன் கூறினார், ரஷ்யாவின் ராணுவத்தில் ஏகே 47 இருந்தது. அதை வாங்கி போலீசாருக்கு கொடுத்துவிட்டு, தற்போது அங்குள்ள ராணுவத்துக்கு ஏகே 74 கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
அதன் பின்னர், இப்போது நம்மிடம்தான் இருக்கிறது. ரஷ்யாவிடமும், நம்மிடமும் மட்டும் தான் ஏகே 74 இருக்கிறது என்றார். அப்போது, நம்மிடம் இருக்கும் இந்த துப்பாக்கி வேறு எங்குமே இல்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்றார். இந்தியாவிலும் இல்லை என்றே கூறினார்.
அப்படியென்றால், இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான் என்றேன். அதற்கு அவர், ஆமாம், இதை அங்கே (இந்தியா) போய்ச் சொல்லுங்கள் என்றார். ஆமாடா, ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை.. சிவகங்கையில் பதற்றம்!
முன்னதாக, சீமான் – பிரபாகரன் சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, இருவரும் இருக்கும் போட்டோ குறித்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.