கல்லூரி கழிவறையில் குழந்தை.. வெளிவந்த மாணவியின் பகீர் பின்னணி!

Author: Hariharasudhan
2 February 2025, 1:45 pm

தஞ்சை கல்லூரி மாணவி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு, அவரது உறவுக்கார இளைஞரே காரணம் என தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் கல்லூரியின் கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார். பின்னர், அந்தக் குழந்தையை அருகில் உள்ள மறைவிடத்தில் வைத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வகுப்பறையிலே அந்த மாணவி மயங்கமடைந்துள்ளார். எனவே, அவர் கும்பகோணம் அரசினர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி குழந்தை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கழிவறையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். அங்கு மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் உள்ளனர்.

College Girl birth baby in restroom in Kumbakonam

மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது 27 வயது உறவினரே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு வருடமாக காதலித்து தனிமையில் இருந்த நிலையில், மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும், காதலித்த நபர் விரைவில் இம்மாணவியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதனால் காதலித்த உறவினர் மீது மாணவி தரப்பில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இறந்த தாயுடன் 9 நாட்களைக் கழித்த சகோதரிகள்.. அதிர்ச்சி காரணம்!

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!