சரவெடியாக ஆரம்பித்த 5வது டி-20 :இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா…!
Author: Selvan2 February 2025, 10:03 pm
சிக்ஸர் மழையில் வான்கேடா மைதானம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளை வெற்றி பெற்று கோப்பையை உறுதி செய்துள்ளது.
இதையும் படியுங்க: இது என்ன IPL மேட்சா…இந்திய அணியை பொழந்து கட்டிய அஸ்வின்…!
இந்த சூழலில் ஏற்கனவே ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 5வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் களமிறங்கியது.முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி,முதல் பந்தே சிக்சருக்கு அடித்து வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
அதன் பின்பு தன்னுடைய சூறாவளி பேட்டிங்கால் இங்கிலாந்து பவுலர்களை கதி கலங்க வைத்தார் இளம் வீரர் அபிஷேக் சர்மா,மைதானத்தில் நாலா புறமும் தன்னுடைய மிரட்டலான பேட்டிங்கால் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர்.
தன்னுடைய அரைசதத்தை 17 பந்துகளில் அடித்து இந்திய அணிக்காக T-2O போட்டியில் அதிவேகமாக ரன்கள் குவித்த வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்தார்,அதன் பிறகும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்த அபிஷேக் சர்மா வெறும் 37 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது சத்தத்தை அடித்தார்,இதன்மூலம் இந்திய அணிக்காக விரைவாக சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.13 சிக்ஸர் அடித்த அவர் 135 அடித்து ஆட்டமிழந்தார்.இதன்மூலம் இந்திய வீரர் ஒருவர் T-20 போட்டியில் அடிச்ச அதிகபட்ச ரன் இதுவே,அபிஷேக் ஷர்மாவின் மிரட்டலானபேட்டிங்கால் இந்திய அணி 247 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அதன் பின்பு ஆடிய இங்கிலாந்து அணியை,இந்திய பவுலர்கள் வெறும் 97 ரன்னுக்கு சுருட்டி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்துள்ளார்கள்.