காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது மாணவனா? நீதி கேட்கும் பெற்றோர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2025, 1:47 pm

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையும் படியுங்க: அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Sipcot

இதன் காரணமாக சிப்காட் அருகே உள்ள அவரக்கரையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கண்ணன் ரேணுகா அவர்களின் மகனை சிப்காட் போலீசார் அழைத்து வந்து விசாரித்து வரும் சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவனின் பெற்றோர்கள் கண்ணன் – ரேணுகா ஆகியோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Petrol Bomb

அதேபோல் எனது மகன் ஐடிஐ படித்து வருவதால் போலீசார் தேவையில்லாமல் குற்றம் செய்த கைதியை இழுத்து விசாரணை செய்யாமல் என்னுடைய மகனை விசாரணை செய்து துன்புறுத்துவதாக கூறி குற்றச்சாட்டை தெரிவித்தனர்..

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!