‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!
Author: Selvan3 February 2025, 3:53 pm
அசோக் செல்வனால் மணிகண்டனுக்கு கிடைத்த வாய்ப்பு
தமிழ் சினிமாவில் தற்போது நல்ல நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் மணிகண்டன்.ஜெய்பீம் படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் அற்புதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இதையும் படியுங்க: ஸ்டூடண்ட்டை கரம் பிடித்த விஜய் டிவி பிரபலம்….ஜாம் ஜாம்னு முடிந்த திருமணம்…!
அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கிருந்தார்.
இப்படத்தில் முதலில் நடிக்க நடிகர் அசோக் செல்வனை படக்குழு அணுகியுள்ளது.கதை கேட்ட அசோக் செல்வனுக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது,ஆனால் அவர் அப்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால்,இப்படத்திற்கு கால்ஷூட் கொடுக்க முடியவில்லை.
அப்போது இயக்குனரிடம்,மணிகண்டனை நடிக்க வையுங்கள் சரியாக இருக்கும் என சிபாரிசு செய்துள்ளார்.உடனே அசோக் செல்வனும் மணிகண்டனுக்கு போன் செய்து இந்த மாதிரி ஒரு கதை வந்து இருக்கு நடிக்கிறீயா என்று கேட்டுள்ளார் ,அதற்கு மணிகண்டன் சிறிதும் யோசிக்காமல் சரி நடிக்கிறேன் என்று கூறி குட் நைட் படத்தில் நடித்து வெற்றியும் அடைந்தார்.இந்த நிகழ்வை சமீபத்தில் மணிகண்டன் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார்.