திமுக கூட்டணியில் இருந்து எந்த பயனும் இல்லை : CM வசனத்தை சுட்டிக்காட்டி காங்.,எம்எல்ஏ புலம்பல்!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 11:34 am
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையும் படியுங்க: கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!
இதில் தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி நடைபெற்றது.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சட்டமன்றத்தில் திமுக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அழித்தாலும் செய்து கொடுக்கிறேன் என்று மட்டுமே சொல்லப்படுகிறது.
ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறினார். நான் மட்டும் இல்ல மற்ற கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினரும் இதுபோன்றுதான் புலம்பி கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.